[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

சிவன் கோவில்தான் தாஜ்மஹாலாக மாற்றப்பட்டது: பாஜக மூத்த தலைவர் கருத்து

taj-mahal-a-hindu-temple-called-tejo-mahal-bjp-lawmaker-vinay-katiyar

தேஜோ மஹால் என்ற சிவன் கோவில்தான் தாஜ்மஹால் என்ற மசூதியாக மாற்றப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் வினய் கத்தியார் கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், உலகின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலை இடிக்கவேண்டும் என தாம் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாஜ்மஹால் இந்து மன்னர்களால் கட்டப்பட்டது என தெரிவித்த கத்தியார், தாஜ்மஹாலின் உட்புறத்தில் உள்ள அறைகளும், சிற்ப வேலைபாடுகளும் இதை நிருபிப்பதாக கூறினார். தாஜ்மஹாலில் மேற்கூரையிலிந்து தண்ணீர் சொட்டும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், இதுபோல் எந்த மசூதியிலும் இல்லை என குறிப்பிட்டார். சிவலிங்கத்திற்குதான் இதுபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் வாதிட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய கத்தியார், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close