[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

சாதி எனும் விஷத்தால் கிராமங்கள் அழிகின்றன: பிரதமர் மோடி பேச்சு

village-destroyed-by-caste-poison-pm-modi

சாதி என்னும் விஷத்தால் பல கிராமங்கள் அழிந்துவருவதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அத்தகைய கிராமங்களில் ஒற்றுமையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

சீர்திருத்தவாதியான நானாஜி தேஷ்முக்கின் 100-ஆவது பிறந்தநாள் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணின் 115-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கிராமங்களை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக தெரிவித்தார். ஊரக பகுதிகளில் வளர்ச்சியை உறுதி செய்ய, பொதுமக்கள் தேவைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் 24 மணிநேர மின்சாரம், தண்ணீர் வசதி மற்றும் இணைய வசதிகள் இருந்தால் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு வசிக்க தயங்கமாட்டார்கள் எனவும் பிரதமர் கூறினார். கிராமப்புறத்தில் உள்ள மாணவனுக்கும், நகர்புற மாணவனுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். சாதி என்னும் விஷத்தால் பல கிராமங்கள் அழிந்துவருவதாக கூறிய பிரதமர், அத்தகைய கிராமங்களில் ஒற்றுமையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close