[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

மஹாராஷ்டிராவில் பிற மாநிலத்தவர்கள் மீது ராஜ்தாக்கரே ஆதரவாளர்கள் தாக்குதல்

mns-workers-attack-non-marathi-outsiders-in-sangli

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது ராஜ்தாக்கரேவின் நவ்நிர்மன் சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

மஹாராஷ்டிராவின் சங்கிலி பகுதியில் ‘மஹாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்’ உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள், மில்கள் மற்றும் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில் முனையங்களில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பிற மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொழில் முனையங்கள் உள்ள குப்வாட் மார்க்கெட் பகுதியில் நேற்று ஒன்றுகூடிய மஹாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள், திடீரென அங்கிருந்த பிற மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணில் பட்ட பிற மாநிலத்தவர்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர். கைகளில் கொடிகளை ஏந்தியவாரு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

குற்றங்கள் நடைபெறுவதற்கும், தங்களது வேலைவாய்ப்பு குறைவதற்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் காரணம் என்று தாக்குதலில் ஈடுபட்ட ராஜ்தாக்கரே ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கிலி போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close