[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

”அனைவரின் தேர்வும் ராகுல்தான்”: ரன்தீப்-சுர்ஜேவாலா

everyone-s-choice-is-rahul-randeep-surjeewala

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட அனைவரின் தேர்வும் ராகுல்காந்திதான் என்று அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்-சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி மற்றும் பல்வேறு பதவிகளுக்கான உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த உள்கட்சி தேர்தலை முடிக்க தேர்தல் ஆணையம் டிசம்பர் மாதம் வரையிலும் அவகாசம் அளித்துள்ளது. இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் கட்சியின் தலைமை பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரின் தேர்வும் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சியின்  தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்-சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் தலைவர் பதவி உட்பட அனைத்து பதவிகளுக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடுவதை ஆரோக்கியமாக வரவேற்கும் எண்ணம் ராகுலிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வரும் தீபாவளிக்கு பின்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தகுதியானவரின் பெயர் அறிவிப்பாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close