[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தர் நியமனம் 

temporary-vice-chancellor-of-banaras-hindu-university

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தராக நீரஜ் திரிபாதி  நியமிக்கப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி மீது நடத்தப்பட்ட  பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிரிஷ் சந்திரா திரிபாதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் மீது நடத்தப்பட்டது வெறும் ஈவ்-டீசிங் என்ற திரிபாதியின் கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் அவர் நீண்ட விடுமுறையில் சென்றார். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் நீரஜ் திரிபாதி தற்போது தற்காலிக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close