[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
இந்தியா 30 Sep, 2017 04:32 PM

வாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்து விட்டார் மோடி: ராஜ்தாக்கரே குற்றச்சாட்டு

mumbai-stampede-pm-modi-liar-won-t-allow-bullet-trains-in-mumbai-says-raj-thackeray

தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு நல்லது செய்வேன் என்று பல வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, தற்போது அனைத்து வாக்குறுதிகளையும் தள்ளுபடி செய்து விட்டார் பிரதமர் மோடி என்று மகாராஸ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கூறினார்.

மும்பை எல்ஃபின்ஸ்டோன் ரயில் நிலைய நடைபாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் மரணமடை ந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஸ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே, பாகிஸ்தான் போன்ற எதிரிகளோ, தீவிரவாதிகளோ எதற்கு? மக்களை கொலை செய்ய நமது ரயில்வேதுறையே போதுமானது. மழை பெய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று ரயில்வேதுறை கூறியுள்ளது. ஆனால் மும்பைக்கு மழை ஒன்றும் புதிதல்ல என்று கூறினார். 

தற்போது உள்ள மெட்ரோ ரயில் கட்டுமானங்களை மேம்படுத்தாதவரை, புல்லட் ரயில் திட்டத்திற்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடமாட்டேன். ரயில் நிலைய நடைபாதைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அகற்றவும், இதுபோல உள்ள பல பிரச்னைகளை தீர்ப்பதற்கு ரயில்வேதுறைக்கு அக்டோபர் 5 வரை காலக்கெடு கொடுத்துள்ளது. காலக்கெடுவிற்குள் சரிசெய்யவில்லை என்றால், எங்கள் பாணியில் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். மேலும், அக்டோபர் 5 ஆம் தேதி, மேற்கு ரயில்வே தலையகத்திலிருந்து சர்ச்கேட் வரை பேரணியாகச் சென்று ரயில்வேதுறையை கேள்வி கேட்போம். வெவ்வேறு பகுதிகளில் இருந்து மும்பைக்கு வந்து குடியேறும் மக்களாலேயே இங்கு கட்டுமான வசதிகள் சரிவடைந்துள்ளன என்று கூறினார்.

மக்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் போது, யோகா செய்யவும், ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் ஈடுபடவும் பிரதமர் மோடி கூறி வருகிறார். மோடி ஒரு பொய்யர், 2014 தேர்தலுக்கு முந்தைய தனது கருத்துக்கள் அனைத்தையும் தற்போது மாற்றிக் கொண்டுள்ளார். இதுவரை இதுபோன்ற ஒரு பொய் பிரதமரை நாம் பார்த்ததில்லை. தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு நல்லது செய்வேன் என்று பல வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, தற்போது அனைத்து வாக்குறுதிகளையும் தள்ளுபடி செய்து விட்டார். புல்லட் ரயில் பணிகளுக்காகவே சுரேஷ் பிரபுவுக்கு பதிலாக பியுஷ் கோயல் ரயில்வே அமைச்சராக மோடியால் நியமிக்கப்பட்டார். கோயல் பயனற்றவர், ஆனால் சுரேஷ் பிரபு திறமையானவர் என்று ராஜ் தாக்ரே கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close