[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

சட்டவிரோதமாக கோவிலை இடித்தது தொடர்பாக 4 பேர் கைது

karnataka-4-arrested-for-demolishing-temple

பெங்களூருவில் சட்டவிரோதமாக கோவிலை இடித்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் வடமேற்கு பகுதியான பெலகவி மாவட்டத்தில் உள்ளது ககாதி கிராமம். இக்கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவில் ஒன்றை அப்பகுதி மக்கள் கட்டினர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அக்கோவிலை ஒரு கும்பல் ஒன்று சட்டவிரோதமாக தகர்த்துள்ளது. மேலும் அக்கோவிலில் உள்ள சிலைகளை எல்லாம் அருகாமையில் உள்ள மற்றொரு கோவிலுக்கு அக்கும்பல் மாற்றியுள்ளது.

கோவிலை இடிப்பது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடமோ, அரசிடமோ அக்கும்பல் அனுமதி வாங்கவில்லை. எனவே இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close