[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
இந்தியா 28 Sep, 2017 08:51 AM

மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

karnataka-cabinet-clears-anti-superstition-bill

மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மசோதா, அடுத்து வரவுள்ள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மனிதத் தன்மையற்ற தீய பழக்க வழக்கங்களை அழித்தொழிக்க இந்த மசோதா பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, “மகராஷ்டிராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாந்தீரிகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் இருந்தது. இந்நிலையில் முற்போக்கு சிந்தனையாளரான எம்எம் கல்புர்கி கொல்லப்பட்டதை அடுத்து மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாவை உருவாக்குமாறு கர்நாடக அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மாநில அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close