[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு

குர்மீத் சிங் வளர்ப்பு மகளை கைது செய்ய பிடியாணை

haryana-police-raid-gk-house-for-honeypreet

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் வீட்டில் ஹரியானா காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஹரியானா ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து ஹரியானாவின் சிர்சா பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் 38பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். கலவரங்கள் தொடர்பாக அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானை கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஹனிபிரீத் தற்போது டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ஹரியானா போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால், ஹனிபிரீத் அங்கு இல்லாததால் வெறுங்கையுடன் திரும்பிய ஹரியானா காவல்துறையினர், அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close