[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை: சித்தராமையா

no-order-passed-to-make-cauvery-management-board-supreme-court

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மைசூரில் தசரா தொடக்க விழாவின்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கருத்து தான் கூறியதாகவும், உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வழக்கறிஞர்கள், தொடக்கம் முதலே காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக விவசாயிகளின் நலனை பாதிக்கிற வகையில் எந்த உத்தரவும் வராதபடி, வலுவான வாதங்களை எடுத்து வைக்கும்படி தங்கள் தரப்பு வழக்கறிஞர்களை வலியுறுத்தியுள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close