[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

kolkata-under-construction-bridge-collapses-many-feared-dead-trapped

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை‌ 18ஆக உயர்ந்துள்‌ளது. விபத்து நடந்த பகுதியில் மேற்கு வங்க முத‌லமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு செய்தார்.

வடக்கு கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியிலுள்ள கணேஷ் டாக்கீஸ் அருகே இந்த‌ விபத்து நேரிட்டது. கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்ததால், தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் 18பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுவதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம் உதவும் என‌ மத்திய இணையமைச்சர் கிரன் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அறிய மேற்குவங்க அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம்‌ ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close