[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 4ஆவது வெற்றியை பதிவு செய்தது
  • BREAKING-NEWS கருணாநிதி உடல்நலம் குறித்து வதந்தி பரவிய நிலையில் அவருடைய புகைப்படம் வெளியீடு
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS நாட்டில் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,669 கோடி: மத்திய அரசு அதிகாரிகள்
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
  • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
  • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
இந்தியா 16 Sep, 2017 01:08 PM

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: காங். நாடு தழுவிய போராட்டம்

continued-rising-petrol-and-diesel-prices-cong-nationwide-struggle

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசு வேடிக்கைப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார். சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோது, உற்பத்தி வரியை பலமுறை விதித்து விலையைக் குறைக்காமல் மத்திய அரசு லாபம் பெற்றதாக அவர் கூறியுள்ளார். ஆனால், விலை உயரும்போது, வரியைக் குறைக்காமல் சாமானிய மக்களின் தலையில் சுமையை ஏற்றி, அரசு கொள்ளை லாபம் பெற்று வருவதாகவும் அஜய் மக்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு 100 ரூபாய் பெட்ரோலிலும் 52 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுவதாகக் கூறிய அவர், இந்த அநியாயத்தை எதிர்த்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close