[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.85
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
 • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
 • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
 • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
 • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
 • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
இந்தியா 16 Sep, 2017 12:18 PM

'ஜப்பானுக்கு மழை தரும் கேரள மேகங்கள்': அங்கும் ஒரு விஞ்ஞானி எம்எல்ஏ

rain-clouds-in-japan-a-scientist-mla

கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மழை மேகங்கள்தான் ஜப்பானுக்கு மழை தருகின்றன என்று கேரள எம்எல்ஏ ஒருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் உள்ள நிலம்பூர் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.வி.அன்வர். மலப்புரம் மாவட்டம் கக்கடம்பொய்யில் கிராமத்தில் தண்ணீர் தீம் பார்க் ஒன்றை உரிய அனுமதி பெறாமல் அன்வர் கட்டியுள்ளார். தீம் பார்க்கின் தண்ணீர் தேவைக்காக சாலியார் ஆற்றில் தடுப்பணை கட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், பழங்குடி மக்களின் குடிநீர் தேவைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

எனவே அங்குள்ள மக்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் திணறிப்போன எம்எல்ஏ, செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ’கேரளாவின் குடிநீர் திட்டங்களுக்கு ஜப்பான் நிதி கொடுப்பது ஏன் தெரியுமா? கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகும் மழை மேகங்கள்தான் ஜப்பானுக்கு மழை தருகின்றன. அதனால்தான் ஜப்பான் உதவி செய்கிறது’ என்றார்.

மேலும், ’கேரளாவில் பாயும் ஆறுகள் எல்லாம் கடைசியாக அரபிக்கடலில் கலக்கும். அந்த தண்ணீர் ஆவியாகி மேகமாக மாறும். அந்த மழை மேகங்கள் நேராக ஜப்பானுக்குப் போய் அங்கு மழையாய் கொட்டும்’ என்று சொல்லி நிருபர்களை கிறுகிறுக்க வைத்தார்.

அன்வரின் இந்த விசித்திரமான கருத்துகள்தான் இப்போது கேரளாவின் ஹாட் டாபிக். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யுடியூப், மீம்ஸ், வீடியோ, கார்டூன் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவைப் போல அன்வரை கலாய்த்து வருகின்றனர் கேரள நெட்டிசன்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close