[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

ராகுல்காந்தி மீது ஸ்மிரிதி ராணி பாய்ச்சல்! 

smrithi-rani-leap-on-rahul-gandhi

அமெரிக்கப் பயணத்தின் போது வாரிசு அரசியலை நியாயப்படுத்திப் பேசிய ராகுல் காந்தி கருத்துக்கு ஸ்மிரிதி ராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது அமெரிக்கப் பயணத்தில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் வாரிசு அரசியலை ஆதரித்துப் பேசியிருந்தார். அந்தச் செய்தி வெளியான உடனேயே பதிலடி தந்திருக்கிறார் பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தோல்வி அடைந்த வாரிசு அவர். இன்று தனது தோல்வி அடைந்த அரசியலைப் பற்றி அமெரிக்காவில் பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் மதிப்பை குறைக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி விரும்புவது வியப்புக்குரியது அல்ல. இது எதிர்பார்த்த ஒன்றுதான். நம் நாட்டு மக்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கவில்லை. இதன் காரணமாகவே, தனது அவர் வேதனையை வெளிநாட்டில் வெளிப்படுத்தி இருக்கிறார்”  எனக் கூறியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close