[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
 • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
 • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
 • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
 • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
 • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
 • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
 • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
 • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
இந்தியா 11 Sep, 2017 10:43 AM

இவங்கள்லாம் போலி சாமியார்கள்: அகாரா பரிஷத் லிஸ்ட்!

akhara-parishad-declares-14-self-proclaimed-godmen-fake

இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் 14 போலி சாமியார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத்தை சேர்ந்த சாமியார் அசராம் பாபு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மும்பையில் ஆசிரமம் நடத்தி வரும் ராதே மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் மீது வழக்குகள் உள்ளன. சாமியார்கள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில் போலி சாமியார்கள் பட்டியலை இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் வெளியிட்டுள்ளது. 

அதில், குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா, ஓம் பாபா, சச்சிதானந்த கிரி, நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், ராம்பால் உள்பட 14 பேர் போலி சாமியர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். அலகாபாத்தில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு மடங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

’இந்து பாரம்பரியத்துக்கு உட்படாத மற்றும் கேள்விக்குரிய செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற சாமியார்களிடம் கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பிற சாதுக்கள் மற்றும் முனிவர்களுக்கு அவமரியாதை ஏற்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close