[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்த எம்.எல்.ஏ.வின் குடியுரிமை ரத்து 

centre-cancel-citizenship-of-trs-mla-says-he-is-german

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிச் சேர்ந்த எம்.எல்.ஏ. சன்னமநேனி ரமேஷின் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் வெமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ். இவர், முதன் முதலில் 2009-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தாவி விட்டார். பதவியை ராஜினாமா செய்து 2010 தேர்தலில் வெற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரமேஷ் குடியுரிமைக்கு எதிராக அவரிடம் தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதி ஸ்ரீநிவாஷ் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அப்போது தேர்தலை ஐதராபாத் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், உச்சநீதிமன்றம் சென்று ஐதராபாத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ரமேஷ் தடை வாங்கினார்.

பின்னர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் வெமுலவாடா தொகுதியில் 2014 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே ஆதி ஸ்ரீநிவாஷ் ரமேஷ் குடியுரிமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில், எம்.எல்.ஏ. ரமேஷின் குடியுரிமை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், ரமேஷ் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து இந்திய குடியுரிமையை வாங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டு இருந்தது.

ரமேஷ் தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர்ராவ் மருமகன் ஆவார். ரமேஷின் தந்தை ராஜேஷ்வர் ராவ் ஒரு மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். 5 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர். இந்திய குடியுரிமை பெறாத யாரும் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close