[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS கர்நாடக மாநிலம் குடகில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
 • BREAKING-NEWS ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான ‘நியூட்டன்’ பரிந்துரை
 • BREAKING-NEWS குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
 • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
 • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
 • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
 • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
இந்தியா 05 Sep, 2017 10:16 PM

பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை

senior-journalist-gauri-lankesh-shot-dead-at-her-residence-in-bengaluru

பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறுகையில், சுமார் இரவு எட்டு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மிக நெருக்கமாக அவர் சுடப்பட்டுள்ளதாகவும் அவரை நோக்கி வந்த ஏழு தோட்டாக்களில் மூன்று அவரது கழுத்திலும் மார்பிலும் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகை நடத்தி வந்த கவுரி பாஜகவினரின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தவர். 55 வயதான கவுரி வலதுசாரிக் கருத்துக்களைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரஹலாத் ஜோஷி என்பவரால் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை எதிர்கொண்டவர். தற்போது கவுரி லங்கேஷின் சகோதரர் தனது சகோதரியின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை விமர்சித்து வந்த நரேந்திர தபோல்கர் 2013 ஆகஸ்ட் 20 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி கோவிந்த் பன்சாரே சுடப்பட்டார். அதன்பிறகு நான்கு நாட்கள் கழித்து அவர் மரணமடைந்தார். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் கல்புர்கி கொல்லப்பட்டார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close