[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
 • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
 • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
 • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
 • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
 • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
 • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
 • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
 • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
இந்தியா 13 Aug, 2017 10:51 AM

தொடரும் ‘ப்ளூ வேல்’ தற்கொலைகள்: மேலும் ஒரு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

blue-whale-challenge-bengal-boy-found-dead-doon-kid-stopped-from-killing-self

‘ப்ளூ வேல்’ என்ற வீடியோ கேம் உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் மித்னாபூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கன் தே என்ற 10 ஆம் வகுப்பு மாணவன் ‘ப்ளூ வேல்’ கேம்-க்கு அடிமையாக இருந்துள்ளார். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த அங்கன் வீட்டில் இருந்த கணினியின் முன்பு சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.

பின்னர் குளிக்க சென்றுவிட்டு சாப்பிட வருவதாக கூறிய மாணவன், நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் குளியலறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் பிளாஸ்டிக் கவர்களால் நைலான் கயிறுபோல் செய்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இந்த விளையாட்டால் இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விளையாட்டால் தற்போது இந்தியாவிலும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘ப்ளூ வேல்’ விளையாட்டால் 13 வயது சிறுவன் ஒருவன் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close