[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

புளூ வேல் விபரீதம்: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

kerala-cm-writes-to-pm-to-ban-online-blue-whale-game

‘புளூ வேல்’  எனப்படும் ஆன்லைன் விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார். 

‘புளூ வேல்’ என்ற விபரீத இணைய விளையாட்டு சிறுவர்கள், இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் ப்ளூ வேல் விளையாட்டை விளை‌யாடி வந்த 13 வயது சிறுவன், பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இந்த விளையாட்டால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விளையாட்டை மத்திய அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது வீடியோ கேம் அல்ல என்றும், இதில் கலந்துகொள்பவர்கள் எங்கிருந்தோ ஒருவர் பிறப்பிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும், இறுதியில் தற்கொலை செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் நிலை ஏற்படுவதாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொன்னான உயிர்களை காப்பாற்ற இந்த விளையாட்டுக்குத் தடை விதிப்பது அவசியம் என்றும் கடிதத்தில் கூறி இருக்கிறார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close