[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
இந்தியா 12 Aug, 2017 10:12 PM

மதிப்பெண் குறைவாக எடுத்தால் தனி சீருடை... கேரளாவில் கிளம்பிய சர்ச்சை

separate-uniforms-for-students-based-on-skills-in-kerala-school

கேரளா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு தனி சீருடை கொடுத்திருப்பது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அல் பரூக் என்ற தனியார் பள்ளியில், மாணவர்களின் செயல்திறனை அதிகப்படுத்துவதாக கூறி, பள்ளியில் வினோதமான சீருடை முறை இந்த கல்வியாண்டு முதல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளை நிற சீருடையும், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு சிவப்பு நிற சீருடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் சராசரி மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வளரும் என்று அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு பெற்றோர்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக கூறினர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் அமைப்பு அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. 

இந்த நடைமுறையின் மூலம் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இது அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதை யோசிக்காமல் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக குழந்தைகள் உதவி மையத்தின் மாவட்ட ஒருங்கமைப்பாளர் அன்வர் கரகடன் தெரிவித்தார். சுமார் 900 மாணவர்கள் பயிலும் இந்த உயர்நிலைப் பள்ளியில் நிலவிவரும் இந்த இரட்டை சீருடை நடைமுறை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த வினோத சீருடை முறை மாற்றப்படும் என அல் பரூக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close