[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

பதான்கோட்டில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் படங்கள் வெளியீடு: அடையாளம் கூறுவோருக்கு சன்மானம்

pathankot-terrorists-photos-out

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் கடந்த ஜனவரி 2-ல் தாக்குதல் நட‌த்தியபோது ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை தேசிய புலானா‌ய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவர்களைப்‌ பற்றி தகவல் தெரிவிந்தவர்கள், டெல்லியில் உள்ள தேசிய‌ புலனாய்வு அமைப்பின் அலுவலகத்திலோ, 96544 47345 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பதன்கோட் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்தியா வருகைதர உள்ள நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் கோரும் நோட்டீசை சர்வதேச அளவிலும் தேசியப் புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதிகள் குறித்து முழுமையான தகவல்களைத் தருவோருக்கு ‌ஒரு லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close