[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவப் படிப்பு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு காங். எம்எல்ஏக்கள் கடிதம்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: ஜி.கே.வாசன்
  • BREAKING-NEWS முதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்
  • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
  • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
இந்தியா 05 Aug, 2017 09:30 PM

ராகுல் காந்தி கார் மீது கல்வீசிய பாஜக இளைஞரணி தலைவர் கைது

attack-on-rahul-gandhi-car-one-arrested

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த ஜெயிஷ் தர்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராக இருப்பவர் ஜெயிஷ் தர்ஜித். ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி இவர் எனவும் அவரைக் கைது செய்துள்ளதாகவும் குஜராத் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி குஜராத்தில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு வந்ததற்கு காரணம் புகைப்படங்கள் எடுப்பதற்காகத்தான் என்று விமர்சித்த குஜராத் முதல்வர் விஜய் ருபானி தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட வந்த போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. பனாஸ்காந்தா மாவட்டம், லால் சவுக் பகுதியில் ராகுல் மக்களை சந்தித்துப் பேசியபோது சிலர் கறுப்பு கொடிகளை காட்டி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ராகுலின் கார் மீது கற்கள் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதில் ராகுல் காயமின்றி தப்பிய நிலையில் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜகவின் இளைஞரணியைச் சேர்ந்த ஜெயிஷ் தர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close