[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

பா.ஜ ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது: பிரதமர் மோடி திட்டவட்டம்

pm-modi-bats-for-quotas-says-nobody-can-snatch-reservation-from-dalits

பாரதிய ஜனதா ஆட்சியில் இட ஒதுக்கீடு முறைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டு வர பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது என தவறான பரப்புரையை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். டெல்லியில் அம்பேத்கர் நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கினார் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்கு பாடுபட்டதில் அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையானவர் அம்பேத்கர் என்றும் பிரதமர் புகழ்ந்துரைத்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் அரசியல் ரீதியான ஒருங்கிணைப்புக்கு உதவிய நிலையில் அம்பேத்கர் சமூக ரீதியான ஒருங்கிணைப்புக்கு பாடுபட்டார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close