[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

இளம்பெண்களுடன் ஆபாச படம்: ஐ.ஏ.எஸ். அதிரடி நீக்கம்!

ias-officer-sacked

இளம் பெண்களுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் துணை ஆணையராக இருந்தவர் நிரஜ் குமார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், அறை ஒன்றில் இளம் பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. 
இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து மாநில அரசு அவரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது.
‘அந்தப் புகைப்படங்கள் உண்மையானதா, போலியா என்பது பற்றி தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close