[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
  • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
  • BREAKING-NEWS ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
  • BREAKING-NEWS அரியலூர்: தத்தனூரில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தடியடி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 23 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
இந்தியா 02 Aug, 2017 06:28 PM

நீங்கள் கற்புள்ளவரா? : கேள்வி கேட்கும் பல்கலைக்கழகம்

university-asking-questions-are-you-virgin

இந்திரா காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேரும் ஊழியர்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தில் திருமணத் தகவல் என்ற இடத்தில் அந்தப் பல்கலைக்கழகம் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பணியில் சேரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், பணியில் சேரும்போது பூர்த்தி செய்து கொடுக்கும் விண்ணப்பத்தில் திருமணத் தகவலைப் பகிர வேண்டும்.

திருமணத் தகவல் என்ற அந்தப் பகுதியில், “நீங்கள் தனிநபரா? திருமணமானவரா? கற்போடுதான் இருக்கிறீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டுள்ளது. மேலும், “திருமணமான ஆண் என்றால் ஒரு மனைவியோடுதான் வாழ்கிறீர்களா? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உங்களோடு வாழ்கிறார்களா? என்றும் கேள்விகளைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த பல்கலைக்கழக நிர்வாகம், “இங்கு பணியாற்றுபவர்கள் எந்தத் தவறான செயல்களிலும் ஈடுபடாமல் தடுக்கவே இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது 1984 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் நடைமுறைதான். புதிதாக எதுவும் விண்ணப்பத்தில் சேர்க்கப்படவில்லை” என்று கூறியுள்ளது. ஆனால் மிக நீண்ட நாட்களாக நடைமுறையில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்த நடைமுறை இப்போதுதான் வெளியே தெரிந்துள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close