[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

கர்நாடக அமைச்சர் வீட்டில் சோதனை - ரூ.5 கோடி சிக்கியது

income-tax-department-rs-5-crore-confiscated

கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் டெல்லி இல்லத்திலிருந்து வருமான வரித் துறையினர் 5 கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர். இது தவிர கர்நாடகாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மேலும் இரண்டரை கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. 

கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். சிவக்குமார் மீதான வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக பெங்களூருவில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் சோதனை நடந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் விடுதியில் அமைச்சர் சிவக்குமார் தங்கியிருந்த அறையில் மட்டுமே சோதனை நடைபெற்றதாகவும் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. வருமான வரித் துறை சோதனையில் உள்நோக்கம் உள்ளதாக காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா குற்றஞ்சாட்டினார். அவருக்கு ஆதரவாக மற்ற காங்கிரஸ் எம்பிக்களும் கூச்சலிட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து அவர்கள் கூச்சலிட்ட நிலையில் அமைச்சர் அருண் ஜெட்லி குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது இரு கட்சி உறுப்பினர்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டதால் அவையில் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close