வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி என்ற நிலையில், வரி செலுத்துவோருக்கு வசதியாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
2017 – 2018 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு திங்கள் கிழமை கடைசி நாள் ஆகும். வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வசதியாக விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் வருமான வரி அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விடுமுறை தினமான இன்றும் கணக்கு தாக்கல் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சேவை மையங்கள், கிரீம்ஸ் சாலை மற்றும் தாம்பரத்திலுள்ள பிஎஸ்என்எல் அலுவலங்களில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம்
மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
கடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு