[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி 

farmer-minister-son-shot-dead-a-suicide-attempt

ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விக்ரம்குமார். முன்னாள் ஆந்திரப்பிரதேச அமைச்சராக இருந்த முகேஷ் கவுடின் மகனான இவர் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக பதவி  வகித்து வருகிறார். பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள காயத்ரி ஹில்ஸ் ஏரியாவில் விக்ரம் கவுர் வீடு உள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த அவர், இன்று அதிகாலை 3.30 மணிக்கு மற்றொரு அறைக்குச்  சென்று துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். 

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறிய விக்ரம் கவுட் மனைவி ஷிபாலி, வீட்டு வாட்ச்மேன் உதவியுடன் விக்ரம் கவுட்டை அப்பகுதியில் உள்ள  மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது துப்பாக்கிக் குண்டுகள் விக்ரம் கவுட்டின் தோல்பட்டை, வயிறு,  முதுகெலும்பு ஆகிய மூன்று இடங்களில் பாய்ந்திருந்தது. அந்தக் குண்டுகள் அகற்றப்பட்டு மருத்துவவர்கள் அவரது உய்ரைக் காப்பாற்றினர். தற்போது அபாய கட்டத்தில் இருந்து அவர் மீண்டுள்ளார். இது தற்கொலையா? அல்லது யாரேனும்  விக்ரம் கவுட்டை துப்பாக்கியால் சுட்டனரா என சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில், மற்ற யாரும், வீட்டிற்கு வந்ததாக பதிவாகவில்லை. இதனையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றது உறுதியானது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில் போதைப்பொருள் கும்பலுடன் விகரம் கவுட்டுக்கு தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 25 லட்சம், 35 லட்சம் 15 லட்சம் என வெவ்வேறு தொகையினைக் குறிப்பிட்டு அவருக்கு சில எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. இதனால் போதைப்பொருள் கும்பலுடன்  தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த 123 பேருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பதாகக் கூறி அவர்கள் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பால் விக்ரம் கவுட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close