[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

புதுச்சேரியின் முதல் மேம்பாலம் திறப்பு

puducherry-s-first-flyover-opening

புதுச்சேரியில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட முதல் மேம்பாலத்தை முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே கடந்த 2013-ஆம் ஆண்டு 830 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியின் பணிகள் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்த மேம்பாலம் புதுச்சேரியின் முதல் மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பாலத்தின் மீதமுள்ள பகுதிகளின் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close