[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராகும் நிதிஷ் குமார்...

nation-to-govern-with-bjp-backing

பீகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் ஆட்சியமைக்கிறார்.

நிதிஷ்குமார் இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி, பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்க உள்ளதாகத் தெரிவித்தார். நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் பாஜகவும் இடம்பெற இருப்பதாக சுஷில் தெரிவித்தார். துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் புகாரால் மகாபந்தன் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதிருப்தி கொண்டிருந்த முதலமைச்சர் நிதிஷ்குமார், தனது பதவியை திடீரென இன்று ராஜினாமா செய்தார். 20 மாதங்களாக நீடித்த மகாபந்தன் கூட்டணி உடைந்தது.

இதையடுத்து நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி, இந்த சூழலில் தேர்தல் வருவதை பாஜக விரும்பவில்லை என்றும், நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைந்தால் பாஜக அவருக்கு முழுஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறியிருந்தார். முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கும் நிலையில், துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close