[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

உத்தராகண்ட் பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்ட குதிரைக்கு அமெரிக்க மருத்துவரின் சிகிச்சை

american-doctor-treates-police-horse-shaktiman

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ தாக்கியதில் காயமடைந்த குதிரையால் எழுந்து நிற்க முடியாததால், சிகிச்சை அளிக்க அமெரிக்க மருத்துவர் அடங்கிய குழு வரவுள்ளது.

அமெரிக்க மருத்துவர் மற்றும் மும்பை, புனேவைச் சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விமானத்தில் வேறு நகரத்திற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கவும் தயாராக இருப்பதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, டேராடூனில் குதிரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இடத்திற்கு சென்ற பாரதிய ஜனதா எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி, அதன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் குதிரையை எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி தடியால் தாக்கினார். இதில் சக்திமான் என்ற குதிரையின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. குதிரையை தாக்கிய எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close