[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

கண்ணையாகுமார் உள்ளிட்ட 5 பேரை இடைநீக்கம் செய்ய ஜேஎன்யூ விசாரணைக்குழு பரிந்துரை?

kanhaiya-kumar-4-others-should-be-expelled-recommends-jnu-panel

தேசவிரோத குற்றச்சாட்டிற்குள்ளான கண்ணையாகுமார் உள்ளிட்ட 5 பேரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என ஜவஹர்லால்‌ நேரு பல்கலைக்கழக விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரி‌விக்கின்றன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக உயர்மட்ட விசாரணைக்குழு அளித்துள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தில் தேசவிரோத முழக்கங்களை எழுப்பியது வெளி நபர்கள் என்றும் அதனை மாணவர்கள்‌‌ தடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்‌ட மாணவர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட பேரணியின் போது மாணவ சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது 4 பேர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் உடனடியா‌க அப்புறப்படுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close