[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

முடக்கப்பட்ட சன் குழும சொத்துகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

supreme-court-refuses-to-release-the-assets-of-the-suspended-sun-group

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முடக்கப்பட்ட சன் குழும சொத்துகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்க தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நிர்ப்பந்தித்ததாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐயிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகள், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது 756 கோடி ரூபாய் மதிப்பிலான சன் குழும சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன.

இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவித்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், சொத்துகளை விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close