[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இளைஞர்!

man-tries-to-open-door-mid-air-on-delhi-ranchi-flight

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர்-ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ராஞ்சி வழியாகச் செல்லும் இந்த விமானம்  வழக்கம் போல் நேற்று இரவு 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, 24-ஏ இருக்கையில் அமர்ந்திருந்த அப்தாப் அகமது என்ற 32 வயது இளைஞர், விமானத்தின் அவசரக் கால கதவைத் திறக்க முயன்றார். இதைக் கண்ட மற்ற பயணிகளும் விமான சிப்பந்திகளும் அதிர்ச்சியடைந்தனர். கதவைத் திறக்க முயன்ற அந்த இளைஞரை பிடித்து இழுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து விமானி ராஞ்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விமான நிலையத்தில் போலீசார் தயாராக இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் அகமதுவை போலீசிடம் ஒப்படைத்தனர். அகமது, ராஞ்சியை சேர்ந்தவர். எதற்காக நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close