[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இந்தியாவுக்கு திரும்ப இது சரியான நேரமல்ல: விஜய் மல்லையா

i-don-t-feel-the-time-is-right-to-return-mallya

இந்தியாவுக்குத் திரும்ப இது‌ சரியான நேரமல்ல என்று, கடன் ஏய்ப்பு மற்றும் நிதி மோசடி வழக்குகளை சந்திக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பிரிட்டன் சென்றுள்ள மல்லையா, லண்டனில் த சண்டே கார்டியன் பத்திரிகைக்கு மின்னஞ்சலில் அஞ்சலில் அளித்த பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.

‌நான் இந்தியன் என்ற வகையில் தாயகம் திரும்ப விரும்புகிறேன் என்று கூறியுள்ள மல்லையா, ஆனால், அங்கு எனது நிலையை விளக்கம் வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏற்கனவே என்னை குற்றவாளியாக சித்தரித்து விட்ட நிலையில், நாடு திரும்ப இது சரியான நேரமல்ல என்றும் மல்லையா கூறியுள்ளார். இதற்கிடையே, எதிர்கால திட்டம் குறித்து மின்னஞ்சலில் எழுப்பிய கேள்விக்கு மல்லையா பதிலளிக்கவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close