[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

"காஷ்மீரின் முதல் பெண் முதல்வராகிறார் மெஹபூபா"

mehbooba-mufti-likely-to-be-first-woman-cm-of-j-k

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிட‌ம் பேசிய பிடிபியின் மூத்த தலைவர் முசாபர் உசேன், மெஹபூபா முஃப்தியை அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்ய, கட்சி ஒருமனதுடன் இருப்பதாக கூறினார். மெஹபூபாவை முதலமைச்சராக தேர்வு செய்வதற்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதாவின் ஒப்புதல் தேவைப்படும் நிலையில், அக்கட்சியில் இருந்து இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும், அதுகுறித்த இறுதி முடிவு கட்சி மேலிடத்திலேயே எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. 87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், 28 இடங்களைக் கொண்ட பிடிபியும், 25 இடங்களைக் கொண்ட பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டால், அவரே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெறுவார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close