[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

இளைஞர்களை இணைத்த ஃபேஸ்புக்: ஏழை மாணவர்களுக்கு உதவி!

poor-students-get-benefited-through-fb

 

ஃபேஸ்புக் மூலம் இணைந்த நண்பர்கள், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்துள்ளனர்.

இன்றைய கால இளைஞர்கள் எப்போதும் முகநூலிலே மூழ்கிக் கிடக்கிறார்கள் என பெரியவர்கள் கடிந்துகொள்வதுண்டு. ஆனால் உண்மையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு கூட அவர்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். சென்னை வெள்ளத்தின் போதும் முகநூல் வழியாகவே திரண்ட பல இளைஞர்கள் சென்னை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப உதவினர்.

தற்போது முகநூல் மூலம் இணைந்த நண்பர்கள், ஆரம்ப பள்ளி ஏழை மாணவ மாணவியருக்கு விலையில்லா பள்ளி உபகரணங்களை வழங்கியுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் முகநூல் மூலம் இணைந்த நண்பர்கள் சந்தோஷ் தலைமையில் ஏழை மாணவ மாணவியருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முனைந்தனர். அதற்காக சிறு தொகை வசூலித்து, அதற்கான பள்ளியை தேர்வு செய்தனர். முழுக்க முழுக்க தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் அன்றாடம் பணிபுரியும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் விஸ்வநாதபுரம் ஆரம்ப பள்ளியை தேர்வு செய்தனர். அங்கு சிறு விழா நடத்தி அந்த பள்ளியின் மாணவ மாணவியர் அனைவருக்கும் விலையில்லா “ஸ்கூல் பேக்” நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close