[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

ராகுலை "குட்டிப்பையன்" என்றழைத்தவருக்கு எல்லாம் போச்சு

person-who-criticised-rahul-faces-problems

ராகுல் காந்தியை "குட்டிப்பையன்" என்று அழைத்த காங்கிரஸ் மேலிடத் தலைவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும்  நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய்பிரதான் என்பவர் ‘வாட்ஸ் அப்’பில் செய்தி ஒன்றை காங்கிரசாரிடம் பரப்பினார். அதில், "ராகுல் காந்திக்கு முதல் அக்கறை நாட்டின் மீதுதான், மற்றவர்களை போல அதானி, அம்பானி, மல்லையா ஆகியோருடன் ராகுல் கை கோர்க்கவில்லை. பப்பு கலக்கி விட்டான்" என்று தெரிவித்திருந்தார். சின்னபையன், குட்டிபையன் என்பதை இந்தியில் செல்லமாக பப்பு என்பார்கள். ராகுல் காந்தியை இவ்வாறு அவர் அழைத்தது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வினய்பிரதானிடம் காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டநிலையில், அவரின் பதிலில் திருப்தி ஏற்படாத தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து கட்சி பதவியிலிருந்தும் நீக்கியுள்ளது.   

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close