[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

'காந்தி ஒரு புத்திசாலி வியாபாரி': அமித்ஷா பேச்சால் கிளம்பியது சர்ச்சை

congress-and-thrinamul-congress-condemns-on-amit-shah-speech

மகாத்மா காந்தி ஒரு புத்திசாலி வியாபாரி என்று பாஜக தலைவர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, அங்கு நடந்த கூட்டம் ஒன்றில், நாடு சுதந்திரம் அடைவதற்காக தொடங்கப்பட்ட இயக்கமே காங்கிரஸ். அந்த இயக்கத்தில் வலது மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட பலரும் இடம் பெற்றிருந்தனர். சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் இயக்கத்தை கலைக்கவே மகாத்மா காந்தி முடிவு செய்திருந்தார். அவர் ஒரு புத்திசாலியான பன்யா என்று தெரிவித்தார். பன்யா என்பது குஜராத்தில் வணிகம் புரியும் ஒரு இனத்தினரைக் குறிக்கும் சொல் ஆகும். 

அமித்ஷா இந்தப் பேச்சின் மூலம் மகாத்மா காந்தியையும், சுதந்திரத்துக்காக தீரமாகப் போராடியவர்களையும் அமித்ஷா அவமதித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நாட்டை பிரிப்பதற்கே இந்து மகாசாபாவை ஒரு கருவியாக பிரிட்டீஷார் பயன்படுத்திக் கொண்டனர் என்று கூறிய அவர், சுதந்திரத்துக்குப் பின்னர் அதேவேலையை பாஜக செய்துவருவதாகவும் விமர்சனம் தெரிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காந்தி குறித்து அமித் ஷா கூறிய கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பொதுவெளியில் பேசும்போது மிகவும் மரியாதையுடன் குறிப்பிட வேண்டும் என்றும் மம்தா, தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close