[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் படம் ஏன் இடம்பெறக் கூடாது?: மத்திய அரசு கேள்வி

govt-ads-should-have-cm-s-pictures-centre-tells-sc

அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் இடம்பெறும் பொழுது‌ மாநிலத்தின் முதலமைச்சர் படம் ஏன் இடம் பெறக்‌கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டிற்கு பிரதமர் எப்படியோ, அதனைப் போன்றே ஒரு மாநிலத்தை நிர்வகிக்க கூடிய முதலமைச்சரும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றும் நாட்டில் எழுத படிக்கத் தெரியாத மக்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு செய்யக்கூடிய திட்டங்களை விளம்பரப்படுத்தும்போது அந்தந்த மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்கள் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றால் மட்டுமே அதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோக்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநில அரசும் மேற்கொள்ளும் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முதலமைச்சரின் பங்கு அளப்பரியது என்றும் அவரது படம் விளம்பரத்தில் இடம் பெற உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close