[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம்: ‌பிரச்னைகளை சமாளிப்பது குறித்து ஆலோசனை

bjp-parliamentary-board-meeting-held-at-delhi

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற‌னர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பும் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பதில் அளிக்கிறார்.

அப்போது பல்வேறு பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் ‌கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவுக்கு நடப்புக் கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறினார்‌.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close