[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

இதயத்திற்குப் பக்கத்தில் இன்னொரு இதயம்

man-got-2-hearts-in-kerala

கேரளாவில் ஒருவருக்கு இரண்டு இதயம் இருப்பது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த 45 வயது நிரம்பிய நபர் ஒருவர் இதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயம் செயலிழந்ததாகவும் அதற்கு பதிலாக அவருக்கு புதிய இதயம் பொருத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவரின் இதயத்தை தானம் பெற்று அதை அவருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அவரது உடலில் இருந்த பழைய இதயம் 10% அளவுக்கு மட்டுமே இயங்கி வந்தது.

பழைய இதயத்தை நீக்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய மருத்துவர்கள் அந்த இதயத்தை அகற்றாமலேயே புதிய இதயத்தை அதன் பக்கத்தில் பொருத்தி வேலையை இரு இதயத்துக்கும் பகிர்ந்து அளிப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி புதிய இதயம் மார்பின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு ஏற்கனவே இருந்த இதயத்தோடு இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 3½ மணி நேரம் தொடர்ந்து நடந்து வெற்றியும் பெற்றது. தற்போது அவரது உடலில் 2 இதயங்கள் உள்ளன. அவை இரண்டுமே செயல்பட்டு வருகின்றன. ஒரு இதயம் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் இரு இதயங்களும் சேர்ந்து செய்கின்றன. இதனால், உடலில் 2 இடங்களில் இதய துடிப்பு கேட்ட வண்ணம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இடதுபுற இதயத்தில் மூன்று இணைப்புகளும், வலதுபுற இதயத்தில் இரண்டு இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close