[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - பாஜக எம்பி சாக்‌ஷி

bjp-mp-sakshi-maharaj-talks-about-rama-temple

ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் விவாதத்தை தற்போது கைவிட வேண்டும் என தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் கூட ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார், ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனை தடுக்கும் சக்தி இந்த பூமியில் இல்லை என்றும் சாக்‌ஷி மகராஜ் கூறினார்.

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானி லக்னோ நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், ராமர் கோவில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தும் எந்த சக்தியும் பூமியில் இல்லை என்று ஷாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close