[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

குஜராத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்?: பாதுகாப்பு அதிகரிப்பு

terror-alert-in-gujarat-centre-rushes-two-nsg-teams-to-state

குஜராத் மாநிலத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் குஜராத்திற்குள் ஊடுருவியிருக்கலாம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், குஜராத் மாநிலத்திலுள்ள விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள்‌, ‌அக்சர்தாம் கோவில், துவாரகா கோவில், சோம்நாத் கோவில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மஹா சிவராத்திரி நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லாத சில படகுகள், குஜராத் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அவற்றின்மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

இதனிடையே, பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பை ஆய்வுசெய்ய தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு குழுக்கள், குஜராத் மாநிலத்தில் முகாமிட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close