[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்

presidential-polls-opposition-to-field-candidate-if-no-consensus-over-government-nominee

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது பற்றி, டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகால மத்தியஅரசின் செயல்பாடுகள் பற்றி விவாதித்தோம். குறிப்பாக சஹரான்பூர் கலவரம், காஷ்மீரி‌ல் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, பணமதிப்பிழப்பு விவகாரம் பற்றி ஆலோசித்தோம். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து விரைவில் கூட்டு அறிக்கை வெளியிடுவோம் குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்கட்சிகள் சார்பாக பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 17 கட்சிகள் பங்கேற்றன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸ் த‌லைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசிய மாநாட்டுக்கட்சி சார்பாக உமர் அப்துல்லா, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதச்சார்பற்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
குடியரசுத்தலைவர் பதவிக்கு பொதுவேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக குழு ஒன்று அமைப்பது எனவும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது பற்றி கூட்டு அறிக்கை விரைவில் வெளியிடுவது என்றும் எதிர் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கடந்த மூன்றாண்டு கால மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close