JUST IN
 • BREAKING-NEWS ரம்ஜான் அன்று டெல்லியில் தாக்குதல் நடக்கலாம்: உளவுத்துறை
 • BREAKING-NEWS சென்னை: தி.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பம்மல், உள்ளிட்ட பகுதிகளில் மழை
 • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது
 • BREAKING-NEWS திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
 • BREAKING-NEWS அதிமுகவை பினாமி ஆட்சி என திமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது: தம்பிதுரை
 • BREAKING-NEWS 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது
 • BREAKING-NEWS இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளித்தார் பிரணாப் முகர்ஜி
 • BREAKING-NEWS அமெரிக்காவுடனான நட்புறவால் இந்தியா பயன்பெறும்: மோடி
 • BREAKING-NEWS திருச்சி சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
 • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு கிரண்பேடி இஃப்தார் விருந்து அளித்தார்
 • BREAKING-NEWS 10ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.inஇல் வெளியீடு
 • BREAKING-NEWS பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி, 50 பேர் காயம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - காவல்துறை சி.டி.ஆதாரத்தை தாக்கல் செய்தது
இந்தியா 19 May, 2017 08:20 PM

ஜிஎஸ்டி வரிவிதிப்பு: இனி பீட்சா கசக்கும்.. பிரெட் புளிக்கும்..!

Cinque Terre

ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாகவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், பொருட்களை 4 பிரிவுகளாக வகைப்படுத்தி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5,12,‌18 மற்றும், 28 சதவிகித வரி விதிப்புகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை தவிர முழு வரிவிலக்கு மற்றும் அதிஆடம்பர பிரிவுக்கு 31 சதவிகித வரியும் அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி அமலானதும் காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், கார்கள் விலை உயரும். எனினும், சிறிய காருக்கு 1 சதவிகித கூடுதல் வரி என்பதால், அதிக விலை உயராது. பான் மசாலா, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், 350 சிசி திறனுக்கு மேல் கொண்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் விலை உயரும். தங்கத்தின் மீது கூடுதலாக 4 சதவிகித வரி வசூலிக்க மாநிலங்கள் கோரியுள்ளதால், பிராண்டட் தங்க நகைகள் விலை உயரும்.

சில பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள குதிரை, பன்றி, ஆடுகள், கோழிகள், வாத்து, உள்ளிட்ட விலங்கினங்கள், பறவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே வேளை தொழில் ரீதியாக பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு 12 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாமிச வகைகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சமைக்கப்பட்ட மாமிச உணவுகளுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. பால்பவுடர்கள், உயர் வெப்பநிலையில் கொதிக்க வைத்து பதப்படுத்தப்பட்ட பால், பால் உணவுகள், பழப்பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பால் பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்களுக்கு 12 சதவிகிதம் வரியும், நொதிக்க வைத்து உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்களுக்கு 18 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

பழ வகைககள், தேங்காய் உள்ளிட்டவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை உலர வைக்கப்பட்ட தேங்காய், வேகவைக்கப்பட்ட பழவகைகளுக்கு 5 சதவிகித வரியும், உலரவைக்கப்பட்ட திராட்சை உள்ளிட்டவைகளுக்கு 12 சதவிகித வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுக்காத காப்பிக் கொட்டை, தேயிலைகளுக்கு விலக்கௌ அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வறுத்த, தோல் நீக்கப்பட்ட காஃபி தூளுக்கும், நறுமணமூட்டப்பட்ட, தேயிலைக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

பீட்சா, பிரெட் வகைகளுக்கு அதிகபட்சமாக 28 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads