[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

அடப்பாவிகளா: சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை!

a-girl-raped-by-her-father

பத்து வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நேற்று ஒரு பெண் தனது 10 வயது மகளை அழைத்துக்கொண்டு வந்தார். சிறுமியின் வயிறு வீங்கியிருந்தது. அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. காரணம் அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தார். சிறுமி என்பதால் உடல் நிலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி விசாரித்தபோது அந்தச் சிறுமி சொன்னது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவளை அவளது வளர்ப்புத் தந்தையே பலமுறை பாலியல் வன்முறை செய்ததாகவும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் அம்மா போலீஸில் புகார் செய்தார். போலீசார் அந்த காம கொடூரனை கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு அடுத்து கொடுக்க வேண்டிய சிகிச்சை பற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூடி, நாளை முடிவெடுக்க உள்ளனர்.

ரோட்டக் மாவட்டத்தில் பெண் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சமீபத்தில் கொல்லப்பட்டார். இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே அதே மாவட்டத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close