[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

லாலுவை விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

supreme-court-judgement

பீகார் மாநிலத்தில் 1990-97-ம் ஆண்டுகளில் லாலுபிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.1000 கோடி ஊழல் செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.

அந்த தீர்ப்பில், ’லாலு பிரசாத் யாதவ் மீதான சிபிஐ வழக்குகள் தொடரும். அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். லாலுவுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை மற்றும் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது.

Advertisement:
Related Tags : Lalu prasad yadav
Advertisement:
Advertisement:
[X] Close