[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஆதார் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

aadhar-card-issue-in-supreme-court

ஆதார் அமைப்பிலிருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கண் விழி மற்றும் கைரேகை பதிவுகள் மூலமாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்று முன்னதாகவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆதார் அட்டை தொடர்பான தகவல்கள் வெளியாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், ஆதார் தொடர்பான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மத்திய அரசின் தரப்பிலிருந்து பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டன.

வாதத்தில், ஆதார் அமைப்பிலிருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் சேகரிக்கப்பட்ட தகவல்களில் வெளிப்படை தன்மை எதுவும் இருக்காது, பாதுகாப்பாகவே உள்ளது என்றும் தெரிவித்தது. ஆதார் அமைப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாக வாய்ப்பில்லை, ஒரு சில அரசு துறைகளில் இருந்து தகவல்கள் கசிந்திருக்கலாம் என்றும் தெரிவித்தது.

நாட்டில் போலி பான் கார்டுகள் அதிகமாக உள்ளதால், ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க உள்ளதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவது குறையும் என்று தெரிவித்தது.

மத்திய அரசின் வாதம் முடிந்த பிறகு, மனுதாரர் சார்பாக ஆஜரான ஷியாம் திவான் தனது வாதத்தை தொடங்கினார். அதில், ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு முயன்று வருவது முற்றிலும் முரணான ஒன்று என்று தெரிவித்தார். ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close