[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ரூபாய் நோட்டில் எழுதியிருந்தாலும் வாங்கலாம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

reserve-bank-warns-banks

ரூபாய் நோட்டில் எழுதியிருந்தால் வாங்க மாட்டோம் என்று மறுக்கக்கூடாது என வங்கிகளை, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலோ, கிறுக்கல்கள் இருந்தாலோ, அல்லது நிறம் மங்கியிருந்தாலோ பல வங்கிகள் நோட்டுகளை பெற்றுக்கொள்ள மறுப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

டிசம்பர் 31, 2013 தேதியிடப்பட்ட சுற்றறிக்கையில், பொதுமக்களோ, வங்கி அலுவலர்களோ ரூபாய் நோட்டுகளில் எழுதக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போது எழுதப்பட்ட, நிறம் குன்றிய, அழுக்கடைந்த நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மீறும் வங்கி அலுவலர்கள் மற்றும் வங்கி கிளைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close